Thursday 18 December 2014

நர்சிங் காலேஜ் - 12

அம்மா என்னை கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்.
ஒரு வாரம் முழுவதும் புடவை கட்டி பழகி இருந்தாலும், இன்று ஏனோ புடவை கட்டி கல்லூரியில் நுழையும் போது கால்கள் நடுங்கின.

கல்லூரி மிகப் பெரிதாக பரந்து விரிந்து இருந்தது. ஏராளமான மரங்கள் இருந்தன. பொண்ணுங்க எல்லோரும் ஒரு ஆல  மரத்தடியில் நின்று  பேசிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேருக்கு ஏற்கெனவே friends இருந்தார்கள். நான் ஊருக்கு புதிது என்பதால் எனக்கு யாரையும் தெரியவில்லை. நானாக சென்று பேச்சை துவக்க தயக்கமாக இருந்தது.

நான் பெண் அல்ல, ஆண் தான் என்பதை கண்டுபிடித்து விட்டார்களா என பயமாக இருந்தது. பின்னர், எப்படியும் தெரிந்துதானே ஆக வேண்டும் என என் மனதை தேற்றி கொண்டேன். இது வரை யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை. எல்லோரும் என்னை பெண் என நினைத்து கொண்டார்கள் போல.

நான் யாருடனாவது பேச ஆரம்பிக்கலாம் என யோசித்துகொண்டிருக்கும் போதே பிரின்சிபால் மூன்று ஆசிரியைகளுடன் வந்தார். எங்களுக்கு கல்லூரி விதிகளையும் மற்ற விவரங்களையும் கூறினார். பேச்சின் போதே அவர் என்னை தேடுவது போல  தோன்றியது. நான் பின்னால் நின்று கொண்டிருந்ததால் தெரியவில்லை போல.  அனைத்து விவரங்களையும் கூறிய பின்னர், "ராஜா, வந்திருக்கிரியா?" என கேட்டார்.  எல்லா பொண்ணுகளுக்கும் ஒரே ஆச்சரியம். எல்லோரும் இங்கு பெண்கள்தான் என  அவர்கள் நினைத்து கொண்டிருந்தார்கள் போல. நான் சில நொடிகள் யோசித்து பின் என் கைகளை மெதுவாக தூக்கினேன். பிரின்சிபால் என்னைக் கண்டு மிகவும் ஆச்சர்யபட்டு போய் விட்டார். அவர் என்னை இவ்வளவு தத்ரூபமான பெண்ணாக எதிர் பார்க்கவில்லை போல. சிலர் நொடிகள் வாயில் விரல் வைத்து  திகைத்து நின்று  விட்டார். பின்னர்  சுதாரித்து கொண்டு,

"girls , இவன்தான் ராஜா. நம்ம காலேஜில் முதல் மற்றும் ஒரே பையன். காலேஜ் uniform rules follow பண்ணுறதுக்காக  புடவை கட்டிட்டு வந்திருக்கான். நீங்க எல்லோரும் அவனுக்கு support ஆ இருக்கணும். யாரும் அவனை தேவை இல்லாமல் கிண்டல் பண்ண கூடாது."

மற்ற பெண்களிடம் ஒரே சல சலப்பு. இதுவரை பெண்கள் கல்லூரி என நினைத்து கொண்டிருந்த இடத்தில் ஒரு  ஆணை பார்த்ததும், அவன் பெண்களை போலவே  புடவையில் வந்திருந்ததும் அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கும்.

"Silence.. இப்போ நீங்க எல்லோரும் class கு போகலாம்.  இன்னைக்கு பாடம் எதுவும் கிடையாது. காலேஜ் ல எல்லா இடத்துக்கும் போய் பாருங்க. உங்க classmates ஓட introduce ஆகிக்கோங்க. lunch கு  அப்புறம் நீங்க வீட்டுக்கு போறதுன்னா போகலாம். திரும்பவும் சொல்லுறேன், ராஜாவுக்கு யாரும் எந்த தொந்தரவும் தரக்கூடாது. மீறினா severe actions  எடுக்க  வேண்டி இருக்கும்." என்று சொல்லிவிட்டு பிரின்சிபால் சென்று விட்டார்.

மற்ற பொண்ணுங்க எல்லோரும் அவர்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டனர். என்னுடன் பேச தயக்கமாக இருந்தது போல. எல்லோரும் எங்கள் classroom ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நான் எல்லோரையும் முன்னால் செல்ல விட்டு தயக்கத்துடன் மெதுவாக கடைசி ஆளாக நடந்து கொண்டிருந்தேன். மற்ற பொண்ணுங்க எல்லாரும் என்னை பின்னால் திரும்பி திரும்பி பார்த்து சிரித்து கொண்டே சென்றனர்.

நாங்கள் அனைவரும் எங்கள்  வகுப்பறையில் சென்று அமர்ந்தோம். ஒரு desk ல் இரண்டு பேர் அமர்வது போல இருந்தது. நான் கடைசியில் வந்ததால் யாரும் இல்லாத ஒரு desk ல் அமர்ந்து கொண்டேன்.
ஒரு பொண்ணு class முன்னாடி வந்து பேச ஆரம்பித்த்தாள்.

"Girls" - என அழுத்தம் திருத்தமாக கண்களை என் மேல் வைத்து பேச ஆரம்பித்தாள். எல்லோரும் அமைதி ஆனார்கள். என்னை வெறுப்பேற்றுவதற்காக வேண்டுமென்றே "Girls" என அழைப்பது போல தோன்றியது.

"நாம இன்னும் மூணு வருஷம் சேர்ந்து படிக்க போறோம். எல்லாரையும் பத்தி தெரிஞ்சிக்க நிறைய நேரம் இருக்கு. இப்போ எல்லாரும் ஒரு சின்ன introduction பண்ணிக்கலாம்" - என்றாள். எல்லோரும் கை தட்டி ஆமோதித்தார்கள்.

"என் பேரு லலிதா" - என ஆரம்பித்து அவள் எங்கு படித்தாள், எவ்வளவு மதிப்பெண் வாங்கினாள். என்னென்ன பொழுதுபோக்கு என விரிவாக பேசினாள்.

வரிசையாக அனைவரும் பேசினார்கள். கடைசியில் என்னுடைய முறை.
மிகவும் nervous ஆக இருந்தது. புடவை தலைப்பை கைகளில் பிடித்து கொண்டே சென்றேன். யாரோ whislte அடித்தாள்.

"என் பெயர் ராஜா" - என ஆரம்பித்தேன்.

"ராஜாவா? ராணியா?" - என யாரோ குரல் கொடுத்தாள். உடனே லலிதா எழுந்திருந்தாள்.

"Girls! Please இவன இப்போ கிண்டல் பண்ணாதிங்க. நம்மளோட சப்போர்ட் இவனுக்கு ரொம்ப முக்கியம். வீணா ஒரு பையனோட படிப்பு தடை ஆகுறதுக்கு நாம காரணமாக வேண்டாம். அதனால, நாம எல்லோரும் நல்லா comfirtable friends ஆகிற வரைக்கும் இவன கிண்டல்  பண்ணாதிங்க.friends குள்ள கேலி கிண்டல் இருந்தாத்தான் நல்லா இருக்கும். ஆனா, இப்போ வேண்டாம்" - என்றாள்

எல்லோரும் அமைதி ஆனார்கள்.

நான் தொடர்ந்து என்னுடைய கதையை கூறினேன். பின்னர் என் desk ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பபோ  லலிதா "ஏய் ராஜா! எங்க போற.. இன்னும் கொஞ்ச நேரேம் நில்லு. உன்கிட்ட சில கேள்விகள் கேக்கணும். நீ ரொம்ப nervous ஆ இருக்க. உன்ன கொஞ்சம் relax பண்ணலாம்" - என்றாள்.

"Girls.. ராஜா கிட்ட உங்களுக்கு என்ன கேக்கணுமோ கேட்கலாம்" - என்றாள்.

"புடவை ரொம்ப அழகா கட்டியிருக்கிற மாதிரி தெரியுது.. யார் கட்டிவிட்டா?" - என ஒருத்தி கேட்டாள்.

"நான்தான் கட்டினேன்" - என்றேன்.

"உண்மையிலேயே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு பையனால் இவ்வளவு நேர்த்தியாக புடவை கட்ட முடியுமா? உன்னோட mannerism ம் பொண்ணுங்களை போலவே இருக்கு. Super. very  good" - என்றாள்.


"Thanks" - என சொல்லி திரும்ப நடக்க பார்த்தேன்.

"ஏய்.. இன்னும் கேள்விகள் முடியல.. முன்னாடி போய் நில்லு" - என இன்னொருத்தி சொன்னாள்.

அவ்வாறே செய்தேன்.

"இங்க எல்லாரும் பொண்ணுங்க.. நீ மட்டும் தான் பையன்... அதுவும் புடவையில் இருக்க. உனக்கு எப்படி தோணுது.. பயமா இருக்கா" - என்றாள்..

"காலையில் முதல் தடவை உங்களை எல்லாம் பார்க்கும் போது பயமாக இருந்தது. இப்போ இல்லை. ஓரளவு relax ஆயிட்ட மாதிரி இருக்கு. இன்னும் மூணு வருடம் எப்படி கழிக்க போறேன்னு தெரியல" - என்றேன்.

"நீ கவலையே படாத ராஜா.. உனக்கு வேண்டிய எல்லா supportம் நாங்க பண்ணுறோம்.. காலேஜ் வர்றப்போ, புடவை கட்டியிருக்குறப்போ, உன்னை ஒரு பொண்ணாவே நினைச்சுக்கோ.. ஒரு பிரச்சனையும் இருக்காது" - என்றாள்.


"கிட்டத்தட்ட பொண்ணு மாதிரியே இருக்க.. இன்னும் கொஞ்சம் முடி மட்டும் இருந்தா உன்ன ஆம்பளன்னு யாரும் சொல்ல முடியாது. உனக்கு முடி வளர்ற வரைக்கும் என் ஒரு wig வாங்கி வச்சிகிட கூடாது" - என இன்னொருத்தி suggestion சொன்னாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "என்கிட்டே wig இல்ல." என்றேன்.

"Girls.. நாம எல்லோரும் சேர்ந்து ஏன் ராஜாவுக்கு ஒரு wig வாங்கி கொடுக்க கூடாது.. யார் யார் contribute  பண்ண முடியுமோ கை தூக்குங்க" - என்றாள்.

அனேகமாக எல்லாரும் கை தூக்கினார்கள்.

இன்னொருத்தி, "ஒரு personal matter. கொஞ்சம் பக்கத்துல வரியா? என கூப்பிட்டாள்."

அருகினில் சென்றவுடன் மெதுவாக கேட்டாள் "நீ bra போட்டுருக்குறது jacket  வழியா தெரியுது. உள்ள ஏதாவது stuff பண்ணி வச்சிருக்கியா ?" என்றாள்.

எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. "இல்லை" - என மெதுவாக கூறினேன்.

" atleast ரெண்டு பக்கமும் hand kerchief வது வச்சுக்கோ.. நல்லா எடுப்பாக இருக்கும் "

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அமைதியாக இருந்து விட்டேன். இப்படி இன்னும் பல questions / suggestions. பின்னர் என் இடத்துக்கு வந்து அமர்ந்தேன். லலிதா வந்து பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். Lunch time ஆனதும் வீட்டுக்கு கிளம்பி விட்டோம்.

8 comments:

  1. Super comeback story Priya....Was expecting this one for a long time...Keep it up

    ReplyDelete
  2. Welcme back really exciting continues ah eluthunga story romba alaga poitu iruku

    ReplyDelete
  3. super story priya pls nilux nandhini piragu ne than kadai tamil yeladra romba sandosama erku pls continue

    ReplyDelete
  4. Thanks for writing :D Please write more. Awesome story (Y)

    ReplyDelete
  5. plz priya storya padikkama thukkam varalai thodarnthu eluthugal plz priya

    ReplyDelete
  6. story wonderful plz 13 part eluthunga

    ReplyDelete
  7. Hi i like this story and i love to be in that character in my life.

    ReplyDelete